taakvellakovil@gmail.com

Scroll News Bar

பல்வேறு ஆசிரியர்களுக்கு பலவருடங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத்தொகையினை பெற தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர்போராட்டம்- விரிவான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் விரைவில் Flying Bee தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலமாக தேவையற்ற மாற்றுப்பணி உத்தரவுகள் இரத்து செய்யப்பட்டன. *_ _* *_ _* வெள்ளகோவில் ஒன்றிய நமது அமைப்பு உறுப்பினர்களுக்கு கூட்டணி டைரிகள் மற்றும் நாட்காட்டிகள் வழங்கப்படவுள்ளன. *_ _* *_ _* நாளை 27.03.2013 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,வெள்ளகோவில் ஒன்றியம் வெற்றிக்கனியை பறிக்க வாழ்த்துகிறது

Wednesday 10 April 2013

கல்வித்துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதவியுயர்வு கிடையாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கல்வித்துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதவியுயர்வு கிடையாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற பதவியுயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு பதவியுயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் "இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது" உயர்நீதிமன்ற நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் தீர்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்கறிஞ்சர் திரு.சங்கரன் அவர்கள் வாதாடினார், இன்று (10.04.2013) இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு.எலிட் தர்மா ராவ் மற்றும் திரு. விஜயராகவன் அவர்கள், மேற்கண்ட "இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது" என்ற தீர்ப்பிற்கு தடை விதித்து தீர்பளித்தனர். இதனால் வரும் பதவியுயர்வு கலந்தாய்வில் இரட்டை பட்டங்கள் பயின்றோருக்கு பதவியுயர்வு வாய்ப்பு ஏற்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: TeacherTn

No comments:

Post a Comment