taakvellakovil@gmail.com

Scroll News Bar

பல்வேறு ஆசிரியர்களுக்கு பலவருடங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத்தொகையினை பெற தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர்போராட்டம்- விரிவான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் விரைவில் Flying Bee தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலமாக தேவையற்ற மாற்றுப்பணி உத்தரவுகள் இரத்து செய்யப்பட்டன. *_ _* *_ _* வெள்ளகோவில் ஒன்றிய நமது அமைப்பு உறுப்பினர்களுக்கு கூட்டணி டைரிகள் மற்றும் நாட்காட்டிகள் வழங்கப்படவுள்ளன. *_ _* *_ _* நாளை 27.03.2013 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,வெள்ளகோவில் ஒன்றியம் வெற்றிக்கனியை பறிக்க வாழ்த்துகிறது

Thursday 21 March 2013

CCEக்கு புதிய மென்பொருள் அறிமுகம்

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம் 1 முதல் 8 வகுப்புகளுக்கு CCE எனும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை நடைமுறையில் உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இது 9ஆம் வகுப்பிற்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதில் வகுப்பாசிரியர் / பாட ஆசிரியர் / மாணவர் திரள் பதிவேடு/ இணை செயல்பாடுகள் பதிவேடு என பல பதிவேடுகள் பராமரிக்க அதிக காலம் எடுத்துக்கொள்வதால். ஆசிரியர்களின் வேலை பளுவை குறைத்து எளிமையாக்க அரசு / ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் CCE சார்பான பதிவேடுகள் மற்றும் மதிப்பெண் அட்டைகள் ஆகியவற்றில் ஆசிரியர்களின் சுமையை குறைப்பது மற்றும் CCE செயல்திறன் பற்றி அறிய "BEE EDUSYS" என்ற நிறுவனம் மூலம் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு மாவட்டத்திற்கு 2 அரசு பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுத்து தமிழக முழுவதும் 64 பள்ளிகளுக்கு, இச்செயல்திறன் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இம்மென்பொருள் படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி / ஊராட்சி பள்ளிகளில் நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மென்பொருள் மூலம் FORMATIVE ASSESSMENT மற்றும் SUMMATIVE ASSESSMENT மதிப்பெண்கள் பதிவு மற்றும் தர மதிப்பீடு பிரித்தல் போன்ற பணிகள் செய்ய உதவியாக இருக்கும். மேலும் மென்பொருள் முழுமையாக அனைத்து பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஆசிரியர்களுக்கு முப்பருவ முறையில் உள்ள CCE சார்பான எழுத்து பணிகள் பெரும் பங்கு குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நன்றி : TeacherTn

No comments:

Post a Comment